எந்தெந்த ராசியினருக்கு எங்கு சென்று வழிபட்டால் சிவனின் முழு அருளைப் பெறலாம்?

மகாசிவராத்திரி அன்று விரதம் இருந்து சிவபெருமானை வழிபடவேண்டும்.
எந்த ராசியினருக்கு எங்கு சென்று வழிபட்டால் சிவனின் முழு அருளைப் பெறலாம் என்பதைக் காண்போம்….

மேஷம்: மலைமேல் அமர்ந்த சிவனை வழிபடுவது நல்லது குறிப்பாக திருவண்ணாமலை சென்று வழிபடலாம், ரிஷபம்: திருவானைக்காவல், கங்கைகொண்ட சோழபுரம், திருவாரூர் ஆகிய ஊர்களிலுள்ள சிவாலயங்களுக்குச் சென்று வழிபடலாம்,

மிதுனம்: திருச்செங்கோடு, சிதம்பரம், காளஹஸ்தி ஆகிய இடங்களுக்குச் சென்று வரலாம். சிவாலயத்துக்குச் சென்றும் பூஜைப் பொருட்களுடன் கரும்புச்சாறு வைத்துப் படைத்து பஞ்சாட்சர மந்திரத்தைச் சொல்லி வணங்கலாம். கடகம்: திருக்கடையூர், திருவானைக்காவல், வேலுர் ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்குச் சென்று வழிபடலாம், சிம்மம்: சிதம்பரம், திருவண்ணாமலை சென்று வழிபடலாம்,

கன்னி: காஞ்சி ஏகாம்பரேஸ்வரர், மதுரை மீனாட்சி சொக்கநாதரை வழிபடலாம், துலாம்: சிதம்பரம், காளஹஸ்தி, மதுரை மீனாட்சி சொக்கநாதர் கோவில் சென்று தரிசிப்பது மிகுந்த பலனைத் தரும். விருச்சிகம்: திருவண்ணாமலை சென்று வழிபடுவது நல்லது, மகரம்: காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்குச் சென்று வழிபட்டால் சிறப்பான பலன்களை அடையலாம். தனுசு ராசிக்காரர்கள், திருப்பரங்குன்றம், திருவண்ணாமலை சென்று வழிபடுவது நல்லது.

கும்பம்: சிதம்பரம், காளஹஸ்தி ஆகிய சிவ தலங்களுக்குச் சென்று வழிபட்டால், உற்சாகம் தரும் செய்திகள் உங்களை வந்தடையும், மீன ராசிக்காரர்கள் வேதாரண்யம், ஜலகண்டேஸ்வரர் கோயில், திருவானைக்காவல் சென்று வழிபட்டால் சிறப்பான பலனைப் பெறலாம். அப்படிச் செல்ல முடியாதவர்கள் அருகிலுள்ள சிவாலயத்துக்குச் சென்று பாலில் குங்குமப்பூ கலந்து அபிஷேகம் செய்து, பஞ்சாட்சர மந்திரத்தைச் சொல்லி வணங்கலாம். செல்வச்செழிப்பு மிகும்.

Recommended For You

About the Author: tamilnews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *