காரியசித்தி மற்றும் உங்கள் பாவங்களை குறைக்க ஏவற்றை எப்படிக் கொடுக்க வேண்டும்…..

நாம் இப்போது வருடத்தின் இறுதியில் உள்ளோம், ஒவ்வொரு புத்தாண்டு வரும் போதும்,

அந்த ஆண்டு சிறப்பாக இருக்க பல செயல்களைச் செய்வோம்.அந்த வகையில் வரும் ஆண்டு சிறப்பாக இருக்க வேண்டுமானால் மற்றும் நாம் செய்த பாவத்திற்கு பரிகாரமாக சிலவற்றை பின்பற்ற வேண்டும். பாவங்களை குறைக்க என்ன செய்ய வேண்டும்?

மூன்று என்பது பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவனைக் குறிக்கிறது, அதனால் ஏழைகளுக்கு 3 கைப்பிடி அளவு அரிசியை தானமாக வழங்க வேண்டும். பறவை என்பது பறப்பது மற்றும் சுதந்திரத்தைக் குறிக்கிறது, எனவே கூண்டில் அடைக்கப்பட்ட 2 பறவைகளை பறக்க விட வேண்டும். நீங்கள் யாருக்கு தீங்கு செய்ததாக நினைத்து வருந்துகிறீர்களோ, அவர்களுக்கு துளசி செடியை பரிசாக கொடுக்க வேண்டும்.

உங்கள் வாழ்க்கைத் துணையை மனம் வருந்த செய்ததாக நினைத்தால், திருமணமான மூன்று பெண்களுக்கு சிவப்பு நிற வளையல்களை வாங்கி தானமாக கொடுக்க வேண்டும். நீங்கள் செய்த தீய செயலுக்கான தாக்கத்தைக் குறைக்க, ஞாயிற்றுக் கிழமைகளில் ஏழை குழந்தைக்கு தேன் வாங்கி கொடுக்க வேண்டும்.

உங்கள் பெற்றோரின் மனம் புண்படும்படி நடந்து கொண்டதற்கு வருந்தினால், 5 தானியங்களை உங்கள் பெற்றோருக்கு கொடுத்து, அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் பரிசுக்களை கொடுக்க வேண்டும். உங்கள் தெருவில் உள்ள நாய்களுக்கு 5 நாட்கள் குடிப்பதற்கு பால் கொடுத்தால், அது கண்களுக்கு தெரியாத அச்சத்தையும், கவலையையும் நீக்கும்.

இதையும் கொஞ்சம் படியுங்கள்…. வெள்ளிக் கிழமையில் இதை செய்யுங்கள்: செல்வம் அதிகரிக்கும், பணக் கஷ்டம் தீர்ந்து நம் வீட்டில் செல்வ வளம் அதிகரிக்க தொடர்ந்து வெள்ளிக் கிழமையில் ஒருசில செயல்களை பின்பற்றி வந்தால் நல்ல பலன் உண்டாகும். வெள்ளிக் கிழமை என்ன செய்ய வேண்டும்? செல்வத்திற்கு உரிய மகாலட்சுமியை தொடர்ந்து 24 வெள்ளிக் கிழமை வழிபட்டு வந்தால் வீட்டில் செல்வவளம் பெருகும். வெள்ளிக் கிழமை அரசமரத்தடி விநாயகரை வணங்கி 11 தீபம் ஏற்றி, 11 முறைகள் வலம் வந்தால் பணவரவு நிரந்தரமாகும்.

வெள்ளிக் கிழமை பெருமாள் கோவிலில் உள்ள தாயாருக்கு பசும்பாலில் அபிஷேகம் செய்தால் பண வரவு உண்டாகும். வெள்ளிக் கிழமையில் சுக்கிர ஓலையில் மகாலட்சுமி அஷ்டோத்திரம் கூறி செந்தாமரை இதழ் கொண்டு அர்ச்சனை செய்ய தனலாபம் கிடைக்கும். வியாழன் கிழமை மாலை 4-5 மணி நேரம் குபேரகாலமாகும். அந்நேரத்தில் குபேரனை வழிபட்டு வர பண வரவு அதிகரிக்கும்.

தாமரை திரி போட்டு குபேரனுக்கு விளக்கேற்றி வழிபட்டால் பண வரவு அதிகமாகும். அமாவாசை அன்று நம் முன்னோர்கள் இறந்த திதியில் தானம் செய்தால் தனலாபம் உண்டாகும். சுத்தமான நீரில் வாசனை திரவியம் கலந்து இருவேளையும் லட்சுமி மந்திரம் கூறி வீடு முழுவதும் தெளித்திட செல்வம் சேரும். ஓடும் வெள்ளைக்குதிரை, ஜோடி கழுதை படம் ஆகியவற்றை அடிக்கடி பார்த்து வர பணவரவு அதிகமாகும்.

வீட்டில் வெள்ளை புறாக்களை வளர்த்து வந்தால் பணத்தட்டுப்பாடு நீங்கும். ஆந்தையை வழிபட்டால் பணவரவு உண்டாகும்.

Recommended For You

About the Author: tamilnews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *