தமிழ் சினிமாவில் சாதனை படைக்கும் குழந்தை நட்சத்திரங்கள்….!

தமிழ் சினிமாவில் நடிக்கும் ஸ்டார்களை தாண்டி அவர்களுடன் நடிக்கும் துணை நடிகர்கள் மற்றும் குழந்தை நடிகர்களின் நடிப்பை ரசிகர்கள் வரவேற்பது சவாலாகவே இருக்கிறது. அதை மீறியும் சிலர் தங்களின் கதாபாத்திரங்களை சிறப்பாக நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கின்றனர். குறிப்பாக குழந்தை நட்சத்திரங்கள் தங்களின் திறமையால் ரசிகர்களை ஈர்க்கிறார்கள். அந்த காலத்தில் நடிகை ஸ்ரீதேவி மற்றும் குட்டி பத்மினி குழந்தை நட்சத்திரங்களாக தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தார்கள்.

இவர்களை அடுத்து ஷாலினி, பேபி ஷாமினி என இருவரும் தங்களின் சுட்டி, மழலை நடிப்புகளால் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றனர். இவர்களை தொடர்ந்து தமிழ் சினிமாவில் தெய்வத் திருமகள் படத்தில் நடித்த பேபி சாரா, அஜித்தின் மகளாக என்னை அறிந்தால் மற்றும் விஸ்வாசம் படத்தில் சிறப்பாக நடித்த பேபி அனிகா மற்றும் தெறி படத்தில் விஜய்யின் மகளாக நடித்த பேபி நைனிகா ரசிகர்களை ஈர்த்தார்கள்.

தற்போது இவர்கள் வரிசையில் இணைந்துள்ளார் குழந்தை நட்சத்திரம் மானஸ்வி. இமைக்கா நொடிகள் படத்தில் லேடி சூப்பர் ஸ்டாரின் மகளாக நடித்த இந்த பேபி ஸ்டார், அவரின் துறுதுறு பேச்சால், அதிரடி நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். போ போய் சிக்னல்ல பிச்சை எடு என்று அந்த படத்தில் மழலை குரலில் இவர் பேசியது பல மீம்களில் இடம் பிடித்து வைரலானது. இந்த குட்டி வயதில் இப்படி பிரபலமாக இருக்கும் இவர் யார் தெரியுமா? காமெடி நடிகர் கொட்டாச்சியின் மகள்.

இவர் சதுரங்க வேட்டை 2 படத்திலும் நடித்துள்ளார். ஆனால், அந்த படம் இன்னும் வெளிவரவில்லை. இந்நிலையில் பேபி ஸ்டார் மானஸ்வி தர்பார் படத்தில் சூப்பர் ஸ்டாருடன் ஒரு முக்கியகதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். அப்பாவை மிஞ்சும் மகளாக மானஸ்வி வளர்ந்துவிட்டார். என்னுடைய மகள் இவ்வளவு பேமஸாவது எனக்கு மிக்க மகிழ்ச்சி என்று கொட்டாச்சியே பல பேட்டியில் கூறியுள்ளார். லேடி சூப்பர் ஸ்டாருடனும் நடிச்சாச்சு, இப்போ சூப்பர் ஸ்டாருடன் நடிக்கப்போறோம் என பேபியும் டேடியும் வெரி ஹேப்பி.

Recommended For You

About the Author: tamilnews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *