நம்பினால் நம்புங்கள்… இந்த பிரபலங்கள் எல்லாம் உயிர்பிரியும் தருவாயில் இருந்து மீண்டு வந்துள்ளனர்..!

நம்ப முடியாமல் இருக்கிறதல்லவா.. நம்மை திரைப்படங்களில் மகிழ்விக்கும் பிரபல நட்சத்திரங்கள் பலர் ஆபத்தான நோய்களால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை எடுப்பவர்கள்தான். அப்படி பல்வேறு நோய்கள், உடல்நல கோளாறுகளுக்கு சிகிச்சை எடுக்கும் 10 திரை பிரபலங்களின் பட்டியல் இதோ :-

தர்மேந்திரா:
கடந்த 20 வருடங்களாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர் நடிகர் தர்மேந்திரா. அதனாலேயே மதுபோதைக்கு அடிமையாகியுள்ளார்.

ரஜினிகாந்த்:
கடந்த 2011-ஆம் ஆண்டு ஒவ்வாமை மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மேலு, சிங்கப்பூரிலும் சிகிச்சை எடுத்தார்.

அமிதாப் பச்சன்:
Splenic rupture& myasthenia gravis ஆகிய நோய்களால் அமிதாப் பச்சன் பாதிக்கப்பட்டார். கடந்த 1982-ஆம் ஆண்டு, ஜூலை மாதம் கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் மண்ணீரல் கிழிந்து ரத்தம் வீணானது. மேலும், myasthenia gravis எனும் உடல், மன தளர்வு நோய்க்கு ஆட்பட்டார். தற்போது குணமடைந்து வருகிறார்.

சல்மான் கான்:
Trigeminal neuralgia எனப்படும் முக்கோண நரம்பு மண்டலம் பாதிப்புக்கு சிகிச்சை எடுத்து வருகிறார் சல்மான் கான். இதனால், முகவாய், கன்னம் ஆகியவற்றில் வலி ஏற்படும். அமெரிக்காவில் சிகிச்சை எடுத்து தற்போது குணமாகி வருகிறார்.

சோனம் கபூர்:
பதின் பருவத்திலேயே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு பல வருடங்களாக சிகிச்சை எடுத்து வருபவர் நடிகை சோனம் கபூர். தன்னுடைய உணவு கட்டுப்பாட்டால் சீரான உடல் நிலையில் இருக்கிறார்.

ஹ்ருத்திக்ரோஷன்:
மூளை உறைவு பல வருடங்களாக பாதிக்கப்பட்டு, கடந்த 2013-ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 7-ஆம் தேதி அதற்காக சிகிச்சை எடுத்தார். கிரிஷ்-3 திரைப்படத்தின் துவக்க விழாவில், “நான் அற்புதமாக இருக்கிறேன்”, என ஹிருத்திக் ரோஷன் உற்சாகமாக கூறினார்.

ஷாருக்கான்:
இவர் கிங் ஆஃப் கான் மட்டுமல்ல, கிங் ஆஃப் சர்ஜரியும் கூட. கடந்த 25 வருடங்களில் 8 அறுவை சிகிச்சைகள் இவருக்கு செய்யப்பட்டன. விலா, கணுக்கால், முட்டி, கழுத்து, கண், தோள்பட்டையில் இவருக்கு அறுவைசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.

சைப் அலிகான்:
myocardial infractions-ஆல் பாதிக்கப்பட்ட சைஃப் அலிகானுக்கு கடந்த 2009-ஆம் ஆண்டு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டது. இந்த நோய் பரம்பரை நோய்..

லிசாரே:
மல்டிபிள் மைலோமா புற்றுநோயால் இவர் கடந்த 2009-ஆம் ஆண்டு பாதிக்கப்பட்டார். ஆபத்தான நிலையிலேயே கண்டுபிடிக்கப்பட்டாலும், சிகிச்சை பெற்று குணமடைந்தார்.

மனிஷா கொய்ராலா:
கடந்த 2012-ஆம் ஆண்டு கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். மனம் தளராமல் உரிய நேரத்தில் சிகிச்சை எடுத்து தற்போது நலமுடன் உள்ளார்.

Recommended For You

About the Author: tamilnews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *