நேர்கொண்ட பார்வை படம் பார்த்துவிட்டு பிரபல நடிகருக்கு போன் செய்து அஜித் கூறிய விஷயம்- யாரு, என்ன சொன்னார் பாருங்க…..!

அஜித் எப்போதும் மற்ற கலைஞர்களை பாராட்டுவதில் முன்னோடியாக இருப்பார். யாராவது நன்றாக தன் வேலையை செய்தார்கள் என்றால் உடனே வாழ்த்து கூறிவிடுவார். அப்படி நேர்கொண்ட பார்வை படம் பார்த்துவிட்டு அஜித் போன் செய்தது இளம் நடிகர் அர்ஜுன் சிதம்பரத்திற்கு தான். அவர் ஒரு பேட்டியில், ”நான் டப்பிங்கில் இருந்தேன் அப்போது ஒரு போன் அழைப்பு வந்தது. அதில் அஜித் சார்.”

‘முதன்முதலாக வந்த போன் கால் அவருடையது தான். ரொம்ப நல்லா செய்துள்ளீர்கள், இந்த படத்துல நீங்கள் போட்ட உழைப்பு, நேர்மைக்காக உங்களுக்கு வாழ்க்கையில் என்ன கிடைக்க வேண்டுமோ அது கண்டிப்பாக கிடைக்கும் என்றார். அந்த போன் அழைப்பை நான் எப்போதுமே மறக்க மாட்டேன்’ என்று அர்ஜுன் கூறியுள்ளார்.

Recommended For You

About the Author: tamilnews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *