இந்தக்காலத்தில் இப்படியும் நபர்களா! இலங்கையர்களை நெகிழச்செய்த ஏழை மாணவி….

கந்தளாயில் ஓய்வு பெற்ற இராணுவ கொப்ரலின் முக்கிய ஆவணங்கள் மற்றும் பத்தாயிரம் ரூபாவுடன் காணாமல் போன பை சில மணி நேரங்களில் அவரிடமே மாணவி ஒருவர் சேர்த்துள்ளார். கொப்ரல் ஜீ.ஜீ.தர்மதாஸ காலையிலேயே தனது மோட்டார் சைக்கிளுக்கான மாதாந்த கட்டணத்தை செலுத்துவதற்காக சென்ற போதே அவர் இந்த பையை தொலைத்துள்ளார்.

வீட்டை விட்டு சென்று ஒரு மணித்தியாலத்தில் பணம் அவசியம் ஏற்பட்டு தேடிய போது பை காணாமல் போயுள்ளதனை அவர் அறிந்து கொண்டார். பின்னர் தான் பயணித்த வீதியில் பையை தேடிய போதிலும் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் அவர் வீடு திரும்பியுள்ளார். வீடு திரும்பியவுடன் 9 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் பணப்பையை அவரிடம் ஒப்படைத்துள்ளார்.

அந்த பையில் பணம் மற்றும் ஆவணங்களில் எந்தவொரு மாற்றமும் காணப்படவில்லை என கொப்ரல் தெரிவித்துள்ளார். வறுமையான அந்த மாணவியின் வீட்டிற்கு சென்ற கொப்ரல், அவருக்கு தேவையான உதவிகளை செய்வதாக வாக்குறுதியளித்துள்ளார். வறுமையிலும் நேர்மையாக செயற்பட்ட மாணவியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Recommended For You

About the Author: tamilnews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *