வறுத்த பூண்டுகளை சாப்பிட்ட 24 மணிநேரத்தில் இதுதான் நடக்குமாம்!

பூண்டு மிகவும் ஆரோக்கியமான உணவுப்பொருள் என்பதால், அதனை வறுத்து சாப்பிட்டால் உடலில் ஏற்படும் அற்புத மாற்றங்கள் குறித்து இங்கு காண்போம்.

பூண்டை பச்சையாக சாப்பிட்டால் உயர் ரத்த அழுத்தம், குறைந்த ரத்த அழுத்தம், உயர் கொலஸ்ட்ரால், இதய நோய்கள், மாரடைப்பு, பெருந்தமனி தடிப்பு போன்றவற்றை கட்டுப்படுத்தலாம்.

இந்நிலையில், வறுத்த பூண்டை சாப்பிட்டால் என்னவெல்லாம் நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து இங்கு காண்போம்.

வறுத்த பூண்டுகளை சாப்பிட்டால் ஆன்ஜியோடென்சின் என்னும் ஹார்மோன் உற்பத்தியை தடுக்கும். ரத்த நாளங்களை சீராக்கும். வறுத்த பூண்டுகளை சாப்பிட்ட 24 மணிநேரத்தில் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து பார்ப்போம். வறுத்த 6 பூண்டுகளை சாப்பிட்ட ஒரு மணிநேரத்தில், இரைப்பையில் உணவு செரிமானமாகி உடலுக்கு ஆற்றலை தரும்.

இவற்றை சாப்பிட்ட 2-4 மணிநேரத்தில், உடலில் உள்ள Free-Radicals-யை எதிர்த்து பூண்டு போராடும். மேலும், உடலினுள் இருக்கும் புற்றுநோய் செல்களை அழிக்கும். வறுத்த பூண்டுகளை சாப்பிட்ட 4-6 மணிநேரத்தில் உடலில் மெட்டபாலிசம் தூண்டப்பட்டு, உடலினுள் இருக்கும் அதிகப்படியான நீர்மம் வெளியேற்றப்படும் மற்றும் தேங்கியிருக்கும் கொழுப்புகள் கரையும்.

இவற்றை சாப்பிட்ட 6-7 மணிநேரத்தில் ஆண்டி-பாக்டீரியல், ரத்த நாளங்களில் நுழைந்தப் பின், ரத்தத்தில் உள்ள பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட துவங்கும். பூண்டுகளை சாப்பிட்ட 7-10 மணிநேரத்தில் அவற்றில் உள்ள சத்துக்கள் உடலால் உறிஞ்சப்படும்.

அதன் மூலம், உடலுக்கு நல்ல பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தும். இந்த வறுத்த பூண்டுகளை சாப்பிட்ட 10-24 மணிநேரத்தில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை பார்ப்போம்.முதல் ஒரு மணிநேரத்தில் பூண்டு செரிமானமாகிய பின்னர் , பூண்டு உடலை ஆழமாக சுத்தம் செய்யும் பணியை ஆரம்பித்துவிடும். மேலும், பல செயல்களையும் செய்ய ஆரம்பிக்கும்.

அவை:

  • கொலஸ்ட்ரால் அளவுகள் சீராக்கப்படும்.
  • தமனிகள் சுத்தம் செய்யப்படும் மற்றும் இதய நோய்களில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும்.
  • ரத்த அழுத்தத்தை சீராக்கும்.
  • உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும்.
  • உடலினுள் கனமான மெட்டல்கள் நுழைவதை தடுக்கும்.
  • எலும்புகளின் வலிமை அதிகரிக்கும்.
  • அதிகப்படியான மருத்துவ குணத்தால், பூண்டு உடலில் உள்ள சோர்வை போக்கும்.
  • உடலில் உள்ள செல்களின் வாழ்நாளை நீட்டிக்கும்.

Recommended For You

About the Author: tamilnews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *