பிரித்தானியாவில் 13 வயது சிறுவனுக்கு ஒரு பெண் மீது ஈர்ப்பு இருந்த நிலையில், அவள் வேறு நபருடன் பழகுவதை அறிந்த சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹேரி ஸ்டோரி (13) என்ற சிறுவன் பள்ளிக்கூடத்தில் படித்து வந்தான், இந்நிலையில் தனது தோழி ஒருவர் மீது ஸ்டோரிக்கு ஈர்ப்பு ஏற்பட்டது, ஆனால் அந்த பெண் வேறு ஆணுடன் பழகி வந்ததோடு அவனுடன் டேட்டிங் சென்றுள்ளார்.
இதை தாங்கி கொள்ள முடியாத 13 வயது ஸ்டோரி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளான். அவனின் இந்த முடிவு குடும்பத்தாரை பெரும் அதிர்ச்சிலும், தாங்க முடியாத துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து ஸ்டோரியின் தந்தை ஆண்ட்ரூ கூறுகையில், அவன் எப்போதும் மகிழ்ச்சியாகவே இருந்து வந்தான், அவன் மனதில் எந்த கவலையும் இல்லை.
ஒரு தொலைக்காட்சி தொடரில் பெண் கதாபாத்திரம் ஒருவர் தூக்கிட்டு கொள்வார், அப்போது அவரை சிலர் காப்பாற்றி விடுவார்கள். அதை பார்த்து தான் ஸ்டோரியும் தூக்கில் தொங்கியிருக்கலாம் என நினைக்கிறேன், தான் இறந்துவிடுவேன் என அவன் நினைத்திருக்க மாட்டான் என்றே கருதுகிறேன்.
மிகவும் அழகானவனாகவும், சுறுசுறுப்பானவானாகவும் இருந்த ஸ்டோரி வாழ்க்கையில் விளையாட்டு என்பது முக்கிய அங்கமாக இருந்தது. ரக்பி, கிரிக்கெட், டென்னீஸ் போன்றவற்றை விரும்பி விளையாடுவான் என கூறியுள்ளார். பொலிசார் கூறுகையில், இறப்பதற்கு முன்னர் தனது நண்பர்களுக்கு வாட்ஸ் அப்பில், எனக்கு தற்கொலை செய்ய தோன்றுவதாக ஸ்டோரி மெசேஜ் அனுப்பியுள்ளான். ஆனால் ஸ்டோரி கிண்டலாக அதை அனுப்பிருப்பான் என அவன் நண்பர்கள் நினைத்துள்ளனர். அவன் தூக்கில் தொங்கியதை பார்த்ததும், தந்தை அவனுக்கு முதலுதவி சிகிச்சையளித்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார், ஆனால் அவனை காப்பாற்ற முடியவில்லை என கூறியுள்ளனர்.